தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூர் துணிக்கடையில் தீ விபத்து! - தீ விபத்து

திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் பிரபல துணிக்கடையில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒரு கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமானது.

துணிக்கடையில் தீ விபத்து
clothing store in Tirupur

By

Published : Jan 6, 2021, 2:33 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை சீனிவாசா வீதியில், பிரபல துணிக்கடையில் இன்று (ஜன. 06) காலை 8 மணிக்கு கடையை திறக்க வந்த ஊழியர்கள், துணிக்கடையின் முதல் மற்றும் இரண்டாவது மாடியிலிருந்து புகை வருவதை கவனித்து, உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமாகின. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சீனிவாசா சாலையில் அதிகாலை நேரம் பொதுமக்கள் இல்லாததாலும், துணிக்கடையில் பணியாளர்கள் யாரும் இல்லாததாலும் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதனும் காரணமா என்பது குறித்து உடுமலை காவல் துறையினர் விசாரணையை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:8 மாத குழந்தை மரணம்: திருமணத்தை மீறிய உறவு தாயின் கண்ணை மறைத்ததா?

ABOUT THE AUTHOR

...view details