தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரும்பு கடையில் தீ விபத்து- ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் - 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்

திருப்பூர்: மணியகாரம்பாளையம் பகுதியில் பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் முற்றிலும் எரிந்து நாசமாகின.

fire-at-the-iron-shop
fire-at-the-iron-shop

By

Published : Feb 16, 2020, 1:27 PM IST

திருப்பூர் காஞ்சி நகர் பகுதியில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயம்பெருமாள் என்பவர் கடந்த 13 வருடங்களாக வசித்து வருகிறார். இவர், மணியகாரம்பாளையம் பகுதியில் பழைய இரும்பு கடை, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்.

வழக்கம் போல் நேற்றிரவு 10 மணிக்கு ஐயம்பெருமாள், தனது கடையை மூடி விட்டு வீடு திரும்பினார். நள்ளிரவில் கடையில் திடீரென தீ பிடித்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் நான்கு வாகனங்கள் மூலமாக மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

திருப்பூரில் தீப்பற்றி எரியும் பழைய இரும்பு கடை.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிளான பொருள்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியது. தீ விபத்து குறித்து திருப்பூர் ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இளைஞர் கொலை வழக்கு - குண்டர் சட்டத்தில் இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details