தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தவணைத் தொகையை கேட்டு வற்புறுத்தும் நிதி நிறுவனம்! - Financial institution

திருப்பூர்: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிய நிதி நிறுவனம் தவணைத் தொகையை கேட்டு வற்புறுத்துவதாக சிபிஐ தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மனு அளிக்க வந்தோர்
மனு அளிக்க வந்தோர்

By

Published : Jun 20, 2020, 1:34 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுக்க தளர்வுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கடந்த மாதங்களில் முழு பொது முடக்கம் அமலில் இருந்ததால் மக்கள் வீடுகளில் முடங்கினார்கள்.

இதனால் வருமானமின்றி பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தவருகின்றனர். இந்நிலையில் ஆறு மாத காலத்திற்கு தவணைத் தொகை கேட்டு வற்புறுத்தக் கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது

இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட அனுப்பர்பாளையம் பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்த பெண்களை மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் ஒன்று வாங்கிய கடனை திருப்பி செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சிபிஐ தொழிற்சங்கம் சார்பாக பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அதன் பின்னரே மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து மனு அளித்தனர்.

இதையும் படிங்க:தபால் நிலையம் மூலம் 90,561 தொழிலாளர்களுக்கு நிவாரணம் பட்டுவாடா!

ABOUT THE AUTHOR

...view details