மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு அரசின் மின் தொடரமைப்புக் கழகமும் இணைந்து தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 12 உயர்மின் கோபுரங்கள் திட்டங்களை விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்த உள்ளன.
இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் உயர்மின் கோபுரங்களுக்கு பதிலாக சாலையோரமாக கேபிள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஏற்க மனமில்லாமல் தவிர்த்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் நில அளவீட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் திட்ட பணிகளை நடந்து வருகின்றனர்.