திருப்பூர் மாவட்டம் காங்கேயம் - கோவை சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு காங்கேயம்-வெள்ளகோவில் நீர் பாதுகாப்புக்குழு சார்பில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தின் (பிஏபி) வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் பாசனத்துக்கு சட்டப்படி தண்ணீர் விட வலியுறுத்தி தொடர்ந்து 5 நாள்களாக 26 விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஜன.23) காலை கோவையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை உண்ணாவிரத குழுவினர் சந்தித்தனர். அவர்களிடம் முதலமைச்சர் கேட்டுக் கொண்டதன் படி, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக போராட்டக் குழுவின் தலைவர் வேலுச்சாமி அறிவித்தார்.