தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

20 வருட வளர்த்த தென்னை மரங்களை வெட்ட மனமில்லாமல் மாற்று இடத்தில் நடவு செய்து அசத்திய விவசாயி..!

Coconut Trees: திருப்பூரில் 20 ஆண்டுகள் வளர்த்த தென்னை மரங்களை வெட்டி வீழ்த்த மனமில்லாமல் இருந்த விவசாயி, தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடவு செய்துள்ளார்.

தென்னை மரங்களை மாற்று இடத்தில் நடவு செய்து அசத்திய விவசாயி
தென்னை மரங்களை மாற்று இடத்தில் நடவு செய்து அசத்திய விவசாயி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 3:28 PM IST

தென்னை மரங்களை மாற்று இடத்தில் நடவு செய்து அசத்திய விவசாயி

திருப்பூர்:திருப்பூர், நாச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 54) என்ற விவசாயி அவருக்குச் சொந்தமான இடங்களில் 300க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியைத் தொடங்கியுள்ள நிலையில், அப்பகுதியில் வீடு கட்டுவதற்கு இடையூறாக இருந்த சுமார் 50 தென்னை மரங்களில் 35 மரங்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, தென்னை மரங்களை கிரேன் உதவியுடன், ஜேசிபி இயந்திரம் மூலம், வேரோடு பிடுங்கி லாரி உதவியுடன், சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள மற்றொரு தோட்டத்தில் நேற்று (ஜன.01) நடவு செய்துள்ளார்.

இது தொடர்பாக விவசாயி சண்முகசுந்தரம் கூறுகையில், “20 ஆண்டுகளாக வளர்த்த மரங்களில், இடமாற்றம் செய்ய நினைத்த 35ல், கடந்த மாதம் மட்டும் 25 தென்னை மரங்களை இடமாற்றம் செய்துள்ளேன். அதில் 23 மரங்கள் தற்போது மீண்டும் காய் காய்க்க ஆரம்பித்துள்ளது. இரண்டு மரங்கள் மட்டும் பட்டுப்போயுள்ளது. தனது தந்தை காலத்தில் வைக்கப்பட்ட இந்த தென்னை மரங்கள் இன்று வரை நல்ல முறையில் பல்வேறு வகைகளில் உதவி வருகிறது.

இந்த மரங்களை வெட்டி விற்பனை செய்தால், மீண்டும் இது போன்று மரங்களை வளர்க்க 20 வருடம் ஆகும். எனவே, என் தந்தை நினைவாக இந்த மரங்களை இவ்வாறு இடம் மாற்றி மீண்டும் புத்துயிர் கொடுத்து வளர்த்து வருகிறேன். இதுவரை இடமாற்றம் செய்யப்பட்ட 35 மரங்களில் 33 மரங்கள் நல்ல முறையில் வளர்ந்துள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க:சொத்து தகராறு காரணமா கணவன், மைத்துனர் சுட்டுக் கொலை; போலீசில் சரணடைந்த பெண்..!

ABOUT THE AUTHOR

...view details