கரோனா தொற்று, கோழி இறைச்சி மூலமாக பரவுவதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து பல்லடம் பண்ணை கறிக்கோழி கொள்முதல் விலை 20 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையானது. தொடர்ந்து அரசு தரப்பில் கோழி இறைச்சி மூலம் கரோனா பரவாது என்ற விழிப்புணர்வை அடுத்து கோழி இறைச்சி விலை சரிவில் இருந்து மீள தொடங்கியது. இந்நிலையில் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த உற்பத்தியும் பெருமளவு குறைக்கப்பட்டது.
பண்ணை கறிக்கோழி கொள்முதல் விலை 102 ரூபாயாக நிர்ணயம் - பண்ணை கறிக்கோழி
திருப்பூர்: பல்லடத்தில் பண்ணை கறிக்கோழி கொள்முதல் விலை 102 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
farm
தற்பொழுது கோழி இறைச்சிக்கு நுகர்வு அதிகரித்துள்ளதால், கொள்முதல் விலையாக 102 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையானது. அதன் பின்னர் கோழி இறைச்சி விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் ஒரு ஆண்டுக்கு பின்னர் தற்போது 102 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோழி இறைச்சி விற்பனை நிலையங்களில் கிலோ இறைச்சி 200 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படும்.