தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் தேர்தல் ஆயத்தப்பணிகள் தீவிரம் - நாடாளுமன்றம்

திருப்பூர்: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளை ஆயத்தப்படுத்தும் பணிகள் இன்று தொடங்கி துரிதமாக நடைபெற்று வருகிறது.

தேர்தலுக்கு தயாராகும் திருப்பூர் மாவட்டம்

By

Published : Apr 9, 2019, 4:49 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வாக்கு பதிவுக்கான ஆயத்தப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தேர்தலுக்கு தயாராகும் திருப்பூர் மாவட்டம்

வாக்காளர்கள் ஒப்புகை சீட்டு இயந்திரம் முதல்முறையாக இந்தத் தேர்தலில் பயன்படுத்தவுள்ள நிலையில் திருப்பூரில் இன்று அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின. இந்நிலையில் 9 மணிக்கு பணி துவங்கப்பட்டபோதும் 12 மணிக்குதான் முதல் இயந்திரம் பொருத்தப்பட்டதால், பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனிடையே திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சின்னங்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணியும் இன்று துவங்கியது.

இயந்திரங்கள் பொருத்தும் பணிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, இயந்திரங்களை வகைப்படுத்தி பிரிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதுடன் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். இன்று மாலைக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டிய நிலையில் நாளையும் இயந்திரங்கள் தயார்படுத்தும் பணி தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details