திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட கரடிவாவி கிராமத்தைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவருக்குச் சொந்தமாக அப்பகுதியில் 4.75 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலையில், நாச்சிமுத்து நிலத்தின் மீது தனக்கு உரிமை உள்ளதாக அவரின் சகோதரி கருப்பாத்தாள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பு நாச்சிமுத்துக்கு சாதகமாக வந்துள்ளது.
'மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுங்க' - உண்ணாவிரதப் போராட்டத்தில் வயதான தம்பதியர்!
திருப்பூர்: தங்களுடைய நிலத்திலிருந்த மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் வயதான தம்பதியினர் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான மேலும் ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், கடந்த 10ஆம் தேதி பல்லடத்தைச் சேர்ந்த ஆறுமுகம், அவரது உறவினர்களுடன் நிலத்தில் அத்துமீறி நுழைந்து 40 வருட பழமையான மரத்தை அடியோடு பிடுங்கி விற்றுள்ளனர். இதுகுறித்து நாச்சிமுத்து கேட்டபோது, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். நாச்சிமுத்து உடனடியாக காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மரத்தை அகற்றியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் நாச்சிமுத்து, அவரது மனைவியுடன் நிலத்தில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.