கேரள மாநிலத்தின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு - கேரள எல்லையான திருப்பூர் மாவட்டம் உடுமலை சோதனை சாவடி பகுதியில் கால்நடைத் துறையினர் உஷார் நிலையிலுள்ளனர்.
அதன்படி மாநில எல்லைகளில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. மேலும் கேரளாவிலிருந்து முட்டை, கோழி, வாத்து, கோழித்தீவனங்கள் போன்றவற்றை ஏற்றி வரும் வாகனங்களை தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்புகின்றனர். அதுபோல கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனகளுக்கும் கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கின்றனர்.