மாநில உரிமைகளை பறிக்கும் வகையில், இந்தி, நீட் போன்றவற்றைத் திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
'மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசு' - திக.வினர் போராட்டம் - NEET
திருப்பூர்: மாநில உரிமைகளுக்கும் சமூக நீதிக்கும் எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
D.K protest
இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட், இந்தி திணிப்பு ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் இதனை தடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு மௌனமாக இருப்பதைக் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.