திருப்பூர் மாநகர இளைஞரணி சார்பில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் திருப்பூர் காட்டுவளவு பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்துவிட்டு தொண்டர்களிடையே பேசினார்.
விரைவில் திமுக ஆட்சி: திருப்பூரில் உதயநிதி பேச்சு! - திமுக
திருப்பூர்: விரைவில் திமுக ஆட்சி மலரும் என்றும், அப்போது தமிழ்நாட்டு மக்களின் ஆசை நிறைவேறும் எனவும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
udhay
அப்போது, ‘தொகுதிக்கு பத்தாயிரம் இளைஞர்கள் என தமிழ்நாட்டில் மொத்தம் 30 லட்சம் இளைஞர்களை கட்சியில் இணைப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. விரைவில் திமுக ஆட்சி மலரும். அப்போது மக்களின் ஆசைகள் நிறைவேறும்' என்றார்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் சாமிநாதன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.