தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேறும் சகதியுமாக உள்ள சாலைகள்: நாற்று நட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்! - Tiruppur news in Tamil

திருப்பூர்: சேறும் சகதியுமாக உள்ள மங்கலம் சாலையில் திமுகவின் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட அக்கட்சியினர் நாற்று நட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரி சேதமடைந்து காணப்பட்ட சாலைகள்: நாற்று நட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திமுகவினர்!
திருப்பூரி சேதமடைந்து காணப்பட்ட சாலைகள்: நாற்று நட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திமுகவினர்!

By

Published : Dec 17, 2020, 2:57 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 39ஆவது வார்டு ஆண்டிபாளையம் பிரிவிலிருந்து சின்னாண்டிபாளையம் பிரிவு வரை பாதாள சாக்கடை குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் ஒரு வருடமாகியும் சரிவர மூடாததால் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இந்த சாலை திருப்பூரிலிருந்து மங்கலம் வழியாக பல்லடம், கோவை செல்வதற்கு பிரதான சாலையாக இருந்துவருகிறது.

திமுக ஆர்ப்பாட்டம்

இச்சூழ்நிலையில், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி இன்று (டிச. 17) திமுக சார்பில் குளத்துப்புதூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் சேறும் சகதியுமான சாலையில் திமுகவினர் நாற்று நட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டம் தீவிரமாகலாம்?

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சாமிநாதன், “ஆமை வேகத்தைக் காட்டிலும் மெதுவாக பணிகள் நடந்து வருகின்றன. இதை போர்க்கால அடிப்படையில் முடிக்காவிடில் திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடப்படும்” என்றார்.

இதையும் படிங்க...சென்னையில் கல்லூரி, மாணவர் விடுதிகளில் பரிசோதனை தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details