தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் உதவிக்கரம்

திருப்பத்தூர்: கரோனா வைரஸ் நோய் வேகமாக பரவக்கூடியது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By

Published : Apr 13, 2020, 2:27 PM IST

District Collector help
மாவட்ட ஆட்சியர் உதவிக்கரம்

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில்,திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள 25க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வேலையில்லாமல் வருமானம் இன்றி தவித்து வந்துள்ளனர்.

திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் உதவிக்கரம்

இந்நிலையில் ரோட்டரி சங்கம் சார்பில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்களை திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், “கரோனா வைரஸ் நோய் கொடூரமானது இது வேகமாக பரவக்கூடிய நோய். ஆகையால் இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நீங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன், வட்டாட்சியர் செண்பகவல்லி, நகராட்சி ஆணையாளர் சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நாட்டுப்புறக் கலைஞர்களின் கரோனா பாடல்

ABOUT THE AUTHOR

...view details