தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக பல்வேறு ஊராட்சி மன்றங்களில் தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது சாதிய ரீதியான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடத்தப்படும் சாதிய தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - Tirupur District News
திருப்பூர்: தமிழ்நாட்டில் தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடைபெறும் சாதிய ரீதியிலான தாக்குதல்களை கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடத்தப்படும் சாதிய தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இதுகுறித்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டும் ஒரு சில புகார்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.
இதனால் உடனடியாக தமிழ்நாடு அரசு இப்பிரச்னையில் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்திரமாக மக்கள் பணியாற்ற பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி முன்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக இன்று (ஆக.31) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.