தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில்வே தண்டவாளத்தில் கேட்பாரற்று கிடந்த சடலத்தால் பரபரப்பு! - ரயில்வே தண்டவாளத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த பிணத்தால் பரபரப்பு

திருப்பூர்: ரயில்வே தண்டவாளத்தில் கேட்பாரற்று கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த சடலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொலை

By

Published : Jun 2, 2019, 2:25 PM IST

திருப்பூர் மாவட்ட ரயில்வே மேம்பாலம் அருகே இன்று காலை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கேட்பாரற்ற நிலையில் கிடந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக திருப்பூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும், ரயில்வே காவல் துறையினரும் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .

மேலும், ரயில்வே தண்டாவளத்தில் கொலை செய்யப்பட்டு வீசியெறிந்த பிணம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செபாஸ்டியர் என்பதும், அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை திருப்பூர் ரயில்வே கூட் செட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்துவந்தவர் எனவும் தெரியவந்தது.

ரயில்வே தண்டவாளத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த பிணத்தால் பரபரப்பு

ரயில்வே தண்டவாளத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த சடலத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details