திருப்பூர் மாவட்டம் பல்லடம் அங்காளம்மன் கோயில் அருகே ஞானாம்பிகை என்பவருக்கு சொந்தமான தேநீர் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்தச் சத்தம் கேட்டு அக்கம்பக்கதினர் ஓடி வந்தனர். உடனே, தீ விபத்து குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.