திருப்பூர் மாவட்டம், பாரப்பாளையத்தில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பின்னிங் மில் உள்ளது . இங்கு பஞ்சினை நூலாக திரித்து பின்னலாடை நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது . இந்நிலையில், நேற்றிரவு வழக்கம்போல பணிகள் முடிந்து தொழிலாளர்கள் வீட்டுக்கு சென்ற பின் பஞ்சாலையின் ஒரு பகுதியில் இருந்து புகை வெளியேறி உள்ளது .
பின்னிங் மில்லில் தீவிபத்து: பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசம் - தீ விபத்து
திருப்பூர்: பஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.
தீ விபத்து
இதனைக் கண்ட பாதுகாவலர் பஞ்சாலையின் உரிமையாளர் மற்றும் தீயனைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பலமணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.
பின்னர் காவல்துறையினர் தீவிபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.