தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விரைவு ரயில் இயக்கம்! - திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர்: உடுமலை ரயில் நிலையத்தில் எட்டு மாதங்களுக்கு பிறகு சென்னை விரைவு ரயில் இயக்கப்பட்டது.

சென்னை விரைவு ரயில் இயக்கம்
சென்னை விரைவு ரயில் இயக்கம்

By

Published : Dec 9, 2020, 7:09 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா பாதிப்பு காரணமாக கடந்த எட்டு மாதங்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது அரசு பல்வேறு தளர்வுகள் அளித்த நிலையில், ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இன்று (டிச.9) சென்னையில் இருந்து விரைவு ரயில் புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு சென்றது. இன்று காலை எட்டு மணிக்கு உடுமலைப்பேட்டை வந்த சென்னை விரைவு ரயிலில் பொதுமக்கள் பலர் பயணம் செய்தனர்.

சென்னை விரைவு ரயில் இயக்கம்

அதேபோல் இன்று மாலை ஐந்து மணிக்கு அந்த ரயில் பாலக்காட்டிலிருந்து புறப்பட்டு மீண்டும் அதே மார்க்கம் வழியாக சென்னை செல்கிறது.

சென்னை விரைவு ரயில் இயக்கம்

இதையும் படிங்க: ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பெரியார் உணர்வாளர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details