கிணற்றுக்குள் விழுந்த கார்: பயணித்த 5 பேரும் பத்திரமாக மீட்பு! - கிணற்றுக்கள் விழுந்த கார்
திருப்பூர்: கோவில்பாளையம் அருகே சாலையோரமாக இருந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த ஐந்து பேரும் தீயணைப்புத் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
திருப்பூரைச் சேர்ந்த சென்ட்ராயன், அவரது குடும்பத்தினர் வத்தலகுண்டு சென்றுவிட்டு திருப்பூர் நோக்கி பயணம் செய்தனர். அப்போது கோவில்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது கார் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த கிணற்றில் விழுந்தது. கிணற்றில் ஐந்து அடி மட்டுமே நீர் இருந்த நிலையில் உடனடியாக சம்பவம் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இருந்த ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டனர். அவர்களோடு கிணற்றுக்குள் விழுந்த காரையும் மீட்டனர். உடனடியாக மீட்கப்பட்டு அனைவரும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.