திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம்-திருப்பூர் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது டொயோட்டோ எட்டியாஸ் நிறுவனத்தின் சோதனையோட்டக் கார் ஒன்று மோதியது. மோதிய வேகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திசைமாறி தாறுமாறாக ஓடிய டொயோட்டோ எட்டியாஸ் கார்சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆம்னி வேன், நான்கு இருசக்கர வாகனங்கள் மீதும் சரமாரியாக மோதியது.
தாறுமாறாக ஓடிய கார்! அதிர்ஷ்டவசமாக பலர் உயிர் பிழைப்பு - Palladam-Tirupur road
திருப்பூர்: பல்லடம்-திருப்பூர் சாலையில் இரண்டு கார்கள், நான்கு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. அதில் ஒரு கார் பேக்கரிக்குள் பாய்ந்து அப்பளம் போல் நொறுங்கியது.
இதையடுத்தும், நிற்காது வேகமாய் சென்ற கார் அங்கிருந்த பேக்கரி கடைக்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் புகுந்து அப்பளம் போல் நொறுங்கியது.அப்போது,காரின் பாதுகாப்புக்காக உள்ள பலூன் வெளியானதால் அதனை ஓட்டிவந்த சுப்பிரமணியம் (37), உடனிருந்த பாலமுருகன் (25) ஆகிய இருவரும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் பேக்கரி கடையில் பணியாற்றிய ரத்தினசாமி (29) என்பரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
மேலும் பேக்கரி கடை முன்பாக வாகனங்களை நிறுத்திவிட்டு அமர்ந்திருந்த பத்துக்கும் மேற்பட்டோரும் உயிர் தப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த பல்லடம் காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். இச்சம்பவத்தால் பல்லடம்-திருப்பூர் சாலையில் பெரும் பரபரப்பு நிலவியது.