நாட்டின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட் குறித்து பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
உலக நாடுகளோடு போட்டிப் போடவே அந்நிய முதலீடு - வானதி சீனிவாசன் - வானதி சீனிவாசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு
திருப்பூர்: இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை நிலையை மாற்றவும் உலக நாடுகளோடு போட்டி போடவுமே அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு வருகின்றன என்று பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், அனைத்து தொழில் துறை, அனைத்து தரப்பு மக்களும் வளர்ச்சியடையக் கூடிய வகையில் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 100 சைனிக் பள்ளிகளை உருவாக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு , பட்டியலின மாணவர்களின் கல்விக்காக ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிலவுகின்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை நிலையை மாற்றவும் உலக நாடுகளுடன் போட்டிப் போடவுமே அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.