பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் பாஜக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கேரள பாஜக பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ரத்த தானம் வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “’தமிழ்நாட்டில் தாமரை மலருமா’ என்று கேட்டவர்கள் மத்தியில், ’தாமரை இல்லாமல் ஆட்சி மலராது’ என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் அதிமுக உடன் கூட்டணி வைத்திருக்கிறது. இந்தக் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும்.