பல்லடத்தை அடுத்த கே.கள்ளப்பாளையத்தில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியில் சனிக்கிழமையன்று பணி முடிந்ததும் அலுவலர்கள் வங்கியை பூட்டி விட்டுச் சென்றுள்ளனர். ஞாயிறு முதல் ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை தினம் என்பதால் இன்று காலை மீண்டும் பணிக்குத் திரும்பிய அலுவலர்கள் வங்கியைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது ஏடிஎம் இயந்திரம் வேறு இடத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வங்கியின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு கொள்ளையர்கள் வங்கியில் புகுந்தது தெரிய வந்தது. வங்கியைச் சுற்றி போடப்பட்டுள்ள முள்வேலிகளைத் துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து திருட முயற்சித்துள்ளனர்.