திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் மாவட்ட முதன்மை கிளையில் பணியாற்றிவரும் ஊழியர் ஒருவருக்கு நேற்றைய தினம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வங்கி ஊழியருக்கு கரோனா உறுதி-கிளை அலுவலத்தை மூடிய வங்கி நிர்வாகம்! - தமிழ்நாடு கரோனா செய்திகள்
திருப்பூர்: ஊத்துக்குளி சாலையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை கிளையில் பணியாற்றிவந்த ஊழியருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், கிளை அலுவலகம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.
இதையடுத்து வங்கிக் கிளை அலுவலகம் முழுவதும் தற்காலிகமாக மூடப்போவதாக வங்கி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று வங்கி கிளை அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.
மேலும் வங்கியில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஊழியருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதன் காரணமாக, வங்கி கிளை அலுவலகம் மூடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.