திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மே தின கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார் . அப்போது பேசிய அவர், "இந்த உலகினை படைப்பது தொழிலாளர்கள். மே தினம் கொண்டாடி வருகின்ற நிலையில் சங்கம் வைப்பதற்காக உரிமை கோரிய மெட்ரோ தொழிலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் புதிய உரிமைகளுக்காக போராடவேண்டிய சூழல் மாறி தற்போது போராடி பெற்ற உரிமைகளை பாதுகாக்கவே போராடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களின் உரிமைகளை கார்ப்ரேட்டுகளுக்கு காவு கொடுத்த மோடி அரசும் அதற்கு உடந்தையாக சென்ற அதிமுக அரசும் மே 23 ஆம் தேதியோடு முடிவடையப்போகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியே இந்த மே தினத்தில் தொழிலாளர்களுக்கான வாழ்த்துச்செய்தி" என்றார்.
மோடியை விமர்சித்து மே தின வாழ்த்து கூறிய கே.பாலகிருஷ்ணன்
திருப்பூர்: தொழிலாளர்களின் உரிமைகளை கார்ப்ரேட்டுகளுக்கு காவு கொடுத்த மோடி அரசாங்கமும் , அதற்கு உடந்தையான அதிமுக அரசும் மே 23 ஆம் தேதியோடு முடிவுக்கு வரும் என்பதே தொழிலாளர்களுக்கான மே தின வாழ்த்து என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கே.பாலகிருஷ்ணன்
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் ஏராளமானோர் சிவப்பு சீருடையில் கலந்துகொண்டனர் .