தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வித்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ‘அன்பாசிரியர்’ விருது! - ஆசிரியர்களுக்கு விருது

திருப்பூர்: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், கல்வித்துறையில் சாதனை புரிந்த ஆசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர்’ விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

assassins-achievement-in-education
assassins-achievement-in-education

By

Published : Feb 24, 2020, 7:28 AM IST

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, இந்து தமிழ் நாளிதழ், ராம்ராஜ் காட்டன் சார்பில், கல்வித்துறையில் சாதனை புரிந்த, தமிழ்நாட்டிலுள்ள மாவட்டத்துக்கு ஒருவர் வீதமும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் என 38 ஆசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர்’ விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப். 23) நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று, ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

இவ்விழாவில் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், "மாணவர்களுக்கு கல்வியை கற்றுத் தர ஆசிரியர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என்றிருந்ததை மாற்றி, மாணவர்களிடம் அன்போடு பணி செய்தால் மட்டுமே அனைவரது அன்பையும் பெற முடியும் என்பதை, இங்கு விருது பெற்ற ஆசிரியர்கள் நிரூபித்துள்ளனர். விருது பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சிறப்புகளை பார்த்த போது, வியந்து போனேன். கிராமப் பகுதிகளில் பள்ளிகளை ஆசிரியர்கள் வழிநடத்தி செல்வதை காணும்போது ஆசிரியர்களுக்கான பெருமை, தமிழ்நாட்டில் இன்னும் குறையவில்லை என்பதை உணர முடிகிறது" எனத் தெரிவித்தார்.

கல்வித்துறையில் சாதனைப்படைத்த அசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர்’ விருது

தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர் தேர்வாணையத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதாகவும், ஆசிரியர்களுக்கு நன்மை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்றும், இதை பயன்படுத்திக் கொண்டு ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருப்பேன என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'களியும் கறிக்குழம்பும்' - எளிய மக்களின் வலிமையான உணவு

ABOUT THE AUTHOR

...view details