தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மறையூர், காந்தலூர், தலையாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் அமராவதி அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு!
திருப்பூர்: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடிவரை உயர்ந்துள்ளது.
அமராவதி அணை
அமராவதியின் நீராதாரங்களான பாம்பாறு, சின்னாறு, தேனாறு, உள்ளிட்ட ஆறுகளிலிருந்து விநாடிக்கு 2,272 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
நீர்வரத்து அதிகரிப்பால் 43 அடியாக இருந்துவந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடிவரை உயர்ந்து 48 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.