திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது அமராவதி அணை திருப்பூர், கரூர் மாவட்டங்களில் பாசனத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
இந்த அணையின் நீர்மட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்துவரும் பருவ மழை காரணமாக மொத்தமுள்ள 90 அடியில், 50 அடியை எட்டியுள்ளது.
மிகவும் எதிர்பார்த்த பருவ மழை சரிவர தொடங்காத நிலையிலும் 20 நாள்களில் சிறுக சிறுக பெய்த மழையால் மொத்தமுள்ள 90 அடியில் 30 அடியிலிருந்து 50 அடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தற்போதைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 50 அடியாகவும், அணைக்கு நீர் வரத்து 250 கனஅடி வீதமும் வந்துகொண்டிருக்கிறது.