திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி அணை பூங்கா சரியான பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இதனால் இங்கு சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்துள்ளது.
அமரர் பூங்காவாக மாறிய அமராவதி அணை பூங்கா - பூங்கா
திருப்பூர்: அமராவதி அணை பூங்கா சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
அமராவதி அணை பூங்கா
இந்த பூங்காவிற்கு நுழைவுக் கட்டணமாக ஒருவருக்கு ரூபாய் 15 முதல் 20 வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.