தமிழ்நாடு முழுவதும் கரோனா காலத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை சிறப்பு ஊதியம் வழங்கப்படவில்லை என திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் உள்ள சுகாதார அலுவலகம் முன்பாக ஏஐடியூசி சுகாதார பணியாளர் சங்கம் சார்பில் இன்று(அக்.28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்க மாநகராட்சி மறுத்து வருவதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு பிடித்தம் செய்தப்படும் பணத்தினை திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.