திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, ஊராட்சி அண்ணா குடியிருப்பில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தம், 2012ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இப்பேருந்து நிறுத்தம் உடுமலைப்பேட்டை பழனி பிரதான சாலையில் அமைந்துள்ளது. தினந்தோறும் ஏராளமான பயணிகள், பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். நிறுத்தத்தின் பக்கவாட்டில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருக்கும் பொதுமக்களுக்கு, எந்த பேருந்து வருகிறது, செல்கிறது என்று பார்க்க முடிவதில்லை.
பேருந்து நிறுத்தத்திற்கு இடையூறாக விளம்பர பேனர்கள்; அகற்ற கோரிக்கை! - bus stop
திருப்பூர்: பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களால், பேருந்துகள் வருவது தெரியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பேனர்கள்
தொலைவிலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வரும் பயணிகளும், பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் பயணிகள் நிழற்குடையில் அமர்ந்து ஓய்வெடுப்பது வழக்கம். தற்போது உள்ள விளம்பர பேனர்களால் பேருந்துகள் வருவது தெரியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பேருந்து நிறுத்தமும் யாருக்கும் உபயோகமில்லாமல் காணப்படுகிறது.
பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் பேனர்களை அரசு நீக்க வேண்டும் என்று உடுமலைப்பேட்டை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.