ஆடி மாதம் என்றால் அம்மனுக்கு உகந்த மாதம் என்று புராணத்தில் கூறப்படுகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் கூல்வூற்றுதல், தீ மிதித்தல், அலகு குத்துதல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அந்த வகையில் புதன்கிழமையன்று ஆடி மாதம் பிறந்த நிலையில், ஆடி முதல் வெள்ளிக்கிழமை நேற்று கடைபிடிக்கப்பட்டது.
ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயிலில் குவிந்த பெண்கள் - கொழுக்கட்டை இட்டு
திருப்பூர்: ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உடுமலைபேட்டையில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில், ஏராளமான பெண்கள் வழிபாடு செய்தனர்.
tpr
இதையொட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோயிலில், பொங்கல் வைத்து, நெய் தீபம் ஏற்றி, கொழுக்கட்டை படையிலிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் வழிபாடு செய்தனர்.