தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பேருந்தை திருட முயற்சித்த பலே ஆசாமிக்கு காவல்துறையினர் வலை! - government

திருப்பூர்: அரசுப் பேருந்தைத் திருட முயற்சித்த அடையாளம் தெரியாத நபரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

அரசுப் பேருந்து

By

Published : Aug 2, 2019, 3:16 PM IST

Updated : Aug 2, 2019, 5:15 PM IST

திருப்பூரில் இருந்து கீரனூர் வரை சென்ற அரசுப் பேருந்து ஒன்று, பயணிகளை இறக்கிவிட்டு திரும்புகையில் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ஓட்டுநரும், நடத்துனரும் அதே பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் படுத்து உறங்கினர். தாராபுரம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக்குச் சொந்தமான இப்பேருந்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திருடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து, அரசுப் பேருந்தை அவர் ஒட்டிச் சென்றபோது, அவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனை எதிர்பார்த்திடாத அந்த நபர், பேருந்தை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதற்கிடையே, மண்டபத்தில் கண் விழித்த பேருந்தின் ஓட்டுநரும், நடத்துனரும் பேருந்து மாயமாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அப்பகுதியில் தேடி பார்த்தபோது, ஒரு கிலோமீட்டர் தொலைவில் பள்ளத்தில் கவிழ்ந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து பேருந்தை பள்ளத்திலிருந்து மீட்டனர்.

பின்னர் இது குறித்து நடத்துனர், ஓட்டுநர் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

Last Updated : Aug 2, 2019, 5:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details