தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இனி டைலர் தேவையில்லை.. திருப்பூரில் புதிய மெஷின் அறிமுகம்!

திருப்பூரில் நடந்து வரும் தையல் இயந்திர கண்காட்சியில் டைலர் இல்லாமல் தானாகவே துணி தைக்கக் கூடிய அதிநவீன தையல் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 11, 2023, 10:10 PM IST

இனி டைலர் தேவையில்லை.. திருப்பூரில் புதிய மெஷின் அறிமுகம்!

திருப்பூர்:பனியன் என்றால் நம் நினைவுக்கு முதலில் எட்டுவது திருப்பூர் நகரம் தான். அந்த அளவிற்கு, பனியன் தயாரிப்பில் திருப்பூர் நகரம் தன் தரத்தை உறுதிபடுத்தியுள்ளது. இங்கு ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் பனியன், உள்ளாடைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பின்னலாடைகள், உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த பனியன் ஏற்றுமதிக்கான உற்பத்தி மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கான தொழிற்சாலைகளில், தினந்தோறும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இதில் வெளி மாவட்டம், வெளி மாநிலத் தொழிலாளர்கள் என லட்சக்கணக்கில் பணிபுரிகிறார்கள். இருப்பினும் திருப்பூர் தொழில் துறையினரின் ஆட்கள் பற்றாக்குறை என்பது தீர்ந்தபாடாக இல்லை. இந்த ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது திருப்பூர் தொழில்துறையினருக்கு பல ஆண்டுகளாக தீராத பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

புலம் பெயர் தொழிலாளர்கள் எடுக்கக்கூடிய தொடர் விடுமுறைகள், சொந்த ஊருக்கு செல்வது போன்ற காரணங்களால் திருப்பூர் பனியன் தொழிலில், ஒவ்வொரு நிறுவனத்திலும் சுமார் 40 சதவீத அளவில், எல்லா காலங்களிலுமே ஆட்கள் பற்றாக்குறை இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் விதமாக, திருப்பூரில் நடந்த தையல் இயந்திர கண்காட்சியில் டெய்லர் இல்லாமல் தைக்கக்கூடிய அதிநவீன தையல் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

பனியன் மற்றும் டீ சர்ட் தயாரிப்பில் கை டவர், பாடி டவர், பாக்கெட் வைப்பது போன்ற பணிகளைத் தானாகவே மேற்கொள்ளும் பேட்லாக் தையல் இயந்திரம் காட்சிப்படுத்தி விளக்கப்பட்டது. துணிகளை கன்வேயரில் வைத்தால் தானாகவே மடித்து தைத்து, பின்னர் அடுக்கி தருவது போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது இந்த இயந்திரம். அதேபோல தானாகவே பாக்கெட் பொருத்தக்கூடிய தையல் இயந்திரமும் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.

இந்த இயந்திரங்களைத் திருப்பூர் சார்ந்த தொழில் துறையினர் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றார்கள். இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், "அதி நவீன இயந்திரங்களின் வருகையால், ஆற்றல் பற்றாக்குறைக்கு பெரும் தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம்" என்றார். மேலும் கான்சாய் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி பிரவீன் குமார் கூறும் போது, "தலையில் இயந்திரங்களில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். தற்போது பேட்லாக் இயந்திரங்களில் கை டவர் மற்றும் பாடி டவர் போன்றவற்றைத் தானாகவே தைக்கும் இயந்திரங்களை உருவாக்கி, அதை திருப்பூர் கண்காட்சியில் காட்சிக்கு வைத்து இருக்கிறோம்.

சாதாரணமாக 1500 பீஸ்கள் தயாரிக்க கூடிய இடத்தில், இந்த நவீன தானியங்கி தையல் இயந்திரங்கள் மூலமாக 2500 முதல் 3000 பீஸ்கள் தயாரிக்க முடியும். டைலர் இல்லாமல் உதவியாளரே இந்த மிஷின்களை இயக்க முடியும். இது தவிர ஓவர்லாக் மற்றும் பிளாட் லாக் இயந்திரங்களில் சென்சார்களுடன் கூடிய அதிநவீன வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண உதவியாளர்களே இந்த மெஷின்களை இயக்க முடியும். எனவே திருப்பூரில் ஆட்கள் பற்றாக்குறைக்கு இந்த இயந்திரங்கள் தீர்வாக அமையும்" என்று கூறினார்.தொழில் நுட்பங்களின் வளர்ச்சி மனித இயல்பை சீர்குலைத்தாலும், மனிதனின் பற்றாக்குறைகளைத் தீர்ப்பதில் தவறியதில்லை.

இதையும் படிங்க:'லூனா-25' விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய ரஷ்யா: சந்திரயான்-3க்கு முன்பே தரையிறங்குகிறதா?

ABOUT THE AUTHOR

...view details