திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு ரேஷன் கடை ஊழியர் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து திருப்பூர் வடக்குத் தொகுதி பறக்கும் படையினர், வருமானவரித் துறை அலுவலர்கள் ரேஷன் கடை ஊழியர் சுமதி (அண்ணா கூட்டுறவுத் தொழிற்சங்கப் பொறுப்பாளர்) அவரது கணவர் செல்வராஜ் (நாம் தமிழர் கட்சியின் கிளை ஒருங்கிணைப்பாளர்) வீட்டில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.
ரேசன் ஊழியர் வீட்டில் 5.5 லட்சம் ரூபாய் பறிமுதல் - திருப்பூர் செய்திகள்
திருப்பூர்: வாக்காளர்களுக்கு ரேஷன் ஊழியர் மூலமாகப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து ரேஷன் ஊழியர் வீட்டில் நடந்த சோதனையில் 5.5 லட்சம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.
ரேசன் ஊழியர் வீட்டில் 5.5 லட்சம் ரூபாய் பறிமுதல்
இதில் ஐந்து லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கண்டறியப்பட்டு பறிமுதல்செய்யப்பட்டது. இந்தப் பணம் தொடர்பாக வருமானவரித் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:'திமுகவிற்கு ஓட்டுப்போடுவதும்; குரங்கிற்கு கோட்டுப்போடுவதும் ஒன்றுதான்!'