திருப்பூர் மாவட்டம் பி.எஸ்.பி. நகரை சேர்ந்தவர் அரவிந்த்குமார் . இவர் பல்லடம் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே சொந்தமாக ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன், தனது தோட்டத்து வீட்டுக்கு சென்றுவிட்டு இன்று வீடு திரும்பியுள்ளர்.
அப்போது அவர் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோ திறந்த நிலையில் கிடந்துள்ளது. அதைக்கண்டு பதறிப்போன அரவிந்த், நகை வைத்திறந்த அறையை சோதித்து பார்த்தபோது, அதிலிருந்த 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.