திருப்பத்தூரில் இருந்து வேலூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது ஜோலார்பேட்டை கோடியூர் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஆறு இளைஞர்கள் திடீரென பேருந்தை நிறுத்த கையசைத்துள்ளனர்.
உடனடியாக பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். பின்னர் ஆறு இளைஞர்களும் பேருந்தில் ஏறுவது போல் சென்று ஏறாமல் ஓட்டுநரை ஏமாற்றி, அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சிறிது நேரம் பேருந்தை நிறுத்திவிட்டு, அங்கிருந்து ஓட்டுநர் புறப்பட்டுச் சென்றார்.