வாணியம்பாடி நகராட்சிக்குள்பட்ட 30ஆவது வார்டு மில்லத் நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில வாரமாக இப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து இப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், இதுவரை நகராட்சி அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.