தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூர் செட்டேரி அணை உடைப்பால் வீணாகும் தண்ணீர்! - thirupathur

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக நிரம்பியிருந்த செட்டேரி அணையின் மதகை மர்ம நபர்கள் உடைத்ததால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

மர்ம நபர்கள் உடைத்த அணையால் வீணான தண்ணீர்
மர்ம நபர்கள் உடைத்த அணையால் வீணான தண்ணீர்

By

Published : Dec 29, 2022, 12:19 PM IST

மர்ம நபர்கள் உடைத்த அணையால் வீணான தண்ணீர்

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் கடந்த 1975ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் 868 ஏக்கர் பரப்பளவில் செட்டேரி அணை கட்டப்பட்டது. 46 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த அணைக்கு தமிழ்நாடு, ஆந்திரா காட்டுப் பகுதிகளில் பெய்யும் மழை நீர் வந்து கொண்டிருந்தது.

ஆனால் ஆந்திர அரசு பல்வேறு தடுப்பணைகள் கட்டியதால் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியின்றி பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இந்த அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து விவசாயிகள் அவதியுற்று வந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக இந்த செட்டேரி அணை முழுவதும் நிரம்பியது. மர்ம நபர்கள் இன்று செட்டேரி அணையின் மதகை உடைத்ததால் நிரம்பி இருந்த அனைத்து தண்ணீரும் வீணாகி வெளியே சென்றன. இதன் காரணமாக இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: தொடர்மழை காரணமாக ஆம்பூரில் வீடு இடிந்து விபத்து!

ABOUT THE AUTHOR

...view details