தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீங்க தான் தினமும் காசு வாங்குறீங்க' வைரலாகும் சார் பதிவாளர் சண்டை வீடியோ! - ஆம்பூர்

’நீங்கள் தான் தினமும் அனைவரிடமும் கை நீட்டி பணம் வாங்குகிறீர்கள்’ என்று ஆம்பூர் சார்பதிவாளருடன் பத்திர எழுத்தாளர் வாக்குவாதத்தில் ஈடுப்படும் வீடியோ சமூக வலதளங்களில் வைரலாகி வருகிறது.

சார் பதிவாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எழுத்தர்
சார் பதிவாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எழுத்தர்

By

Published : Nov 30, 2022, 4:28 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் சிவலோகநாதன். அதே சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே பத்திர எழுத்தாளராக உள்ள சத்யநாராயணன் அலுவலகத்தில் திடீரென நுழைந்து பத்திர பதிவு செய்ய காலதாமதம் ஆகி வருவதாகவும், உடனடியாக அதை முடித்து தரும்படியும் கூறியுள்ளார்.

அதற்கு சார்பதிவாளர் இன்னும் சில தினங்கள் ஆகும் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ”பணம் வேண்டுமென்றால் வாங்கிக்கொண்டு செல்லுங்கள்” என சார் பதிவாளர் கூற, “நீங்கள் தான் தினமும் அனைவரிடமும் கை நீட்டி பணம் வாங்குகிறீர்கள்” என சத்தியநாராயணன் கூறுகிறார்.

சார் பதிவாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எழுத்தர்

இந்த சம்பவம் குறித்து சார் பதிவாளர் சிவலோகநாதனிடம் கேட்டபோது, ”சத்தியநாராயணன் என்பவர் அரசு அங்கீகாரம் பெறாத ஒரு பத்திர எழுத்தாளர், தொடர்ந்து அலுவலகத்திற்குள் நுழைந்து இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகிறார் பலமுறை அவரை கண்டித்தும் அவர் தொடர்ந்து இதுபோன்று செய்கிறார்” என்று சார் பதிவாளர் புகார் கூறினார்.

இதையும் படிங்க:Video Leak:'மினிமம் பேலன்ஸ் கூட இல்ல.. உனக்கு எதுக்கு ஏடிஎம் கார்டு'

ABOUT THE AUTHOR

...view details