திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரியில் 14க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிக்க இயலாமலும், வேலைக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், எங்களது கோரிக்கைக்கு அரசு இதுநாள் வரை செவிசாய்க்கவில்லை.