திருப்பத்தூர் அடுத்த மான்கானுர் பகுதியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் ராஜகோபால் (57). இவர் தனது இருசக்கர வாகனத்தில் புதுப்பேட்டையிலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, அவருக்கு முன்னால் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த காரை முந்தி செல்ல முற்பட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்த ராஜகோபல், காரின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.