திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி; ஆட்டோ ஓட்டுநர். இவர் இன்று (நவ.20) பிற்பகல், தனது ஆட்டோவில், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த லதா மற்றும் துணி வியாபாரம் செய்யும் வட மாநில இளைஞர் ஆகியோருடன் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். சான்றோர்குப்பம் என்ற பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்த போது, தாறுமாறாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, கோவிந்தசாமி ஆட்டோவை திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையின் ஓரம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆம்பூர் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் உள்பட இருவர் காயம் - திருப்பத்தூர் விபத்து செய்திகள்ட
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தின் மீது மோதாமலிருக்க திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட இருவர் காயம் அடைந்தனர்.
auto_accident
இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த இருவரும் காயமடைந்தனர். ஆட்டோ கவிழ்ந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்திலிருந்தவர்கள், உடனடியாக வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:டாஸ்மாக் கடையில் திருட்டு!