தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 25, 2021, 10:00 AM IST

Updated : Mar 25, 2021, 10:10 AM IST

ETV Bharat / state

’சின்னம்மா ஆசி பெற்ற வேட்பாளர்’ - டிடிவி பரபரப்புரையில் தொண்டர் கோஷத்தால் சலசலப்பு

செண்டை மேளம் முழங்க, தொண்டர் படையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட டிடிவி தினகரன், எதுவும் பேசாமல் கையசைத்துச் சென்றார். அப்போது சின்னம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர் என்று அவரை தொண்டர் ஒருவர் குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

ttv election campaign
டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை

திருப்பத்தூர்:திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் ஞானசேகர், ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் தென்னரசு ஆகிய இருவரையும் ஆதரித்து திருப்பத்தூரில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து பல்வேறு இடங்களில் பரப்புரையை மேற்கொண்டு அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திருப்பத்தூருக்கு காலதாமதாக வந்தார். இதனால் தொண்டர்கள் இடையே அவர் கையசைத்துச் சென்றார்.

தொண்டர்களை பார்த்து கையசைத்த டிடிவி தினகரன்

அப்போது தனது கையில் வேல் வைத்திருந்த டிடிவி தினகரன், அதனை எடுத்து கட்சி வேட்பாளர்களிடம் கொடுத்தார். பின்னர் சைகையில் ’நேரமாகிவிட்டது, நான் செல்கிறேன்’ என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது தொண்டர் ஒருவர், ”சின்னம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர், அண்ணன் டிடிவி தினகரன் வாழ்க” என்று உற்சாகமாகக் கத்தினார். இது அங்கு கூடியிருந்த மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

கையில் வேலுடன் டிடிவி தினகரன்

சிறை தண்டனை பெற்று விடுதலையான பின்னர் தீவிர அரசியலில் சசிகலா ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், அவரது பெயர் அமுமுக தேர்தல் பரப்புரையின்போது பயன்படுத்தப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் தேர்தல் பரப்புரையில் டிடிவி தினகரன்

இதையும் படிங்க: 'தோல்வி பயத்தால் முதலமைச்சர் சாபம் விடுகிறார்' - கனிமொழி

Last Updated : Mar 25, 2021, 10:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details