தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூரில் ரயில் போக்குவரத்து பாதிப்பு

ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் அறுந்து விழுந்த உயர்மின் அழுத்த கம்பியால், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரயில் போக்குவரத்து பாதிப்பு
ரயில் போக்குவரத்து பாதிப்பு

By

Published : May 5, 2022, 6:47 AM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் நேற்று (மே.4) இரவு 9:45 மணியளவில் சென்னை - பெங்களூர் மற்றும் கோயமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரயில்வே இருப்பு பாதையில் உயர்மின் அழுத்த கம்பி திடீரென அறுந்து விழுந்ததுள்ளது. இதனால் அவ்வழியாக கேரளாவிற்கு சுண்ணாம்பு ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் விண்ணமங்கலம் பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக நின்றது.

மேலும் இவ்வழியாக செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ் என 5-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் மற்றும் பல சரக்கு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அறுந்து விழுந்த உயர்மின் அழுத்த கம்பியை ரயில்வே ஊழியர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டு, 12:30 மணியளவில் சரி செய்தனர். பின்னர் ரயில்கள் இயக்கப்பட்டன.

ரயில் போக்குவரத்து பாதிப்பு

விண்ணமங்கலம் பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 37 பேருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details