தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகனம் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் மரணம்!

திருப்பத்தூர்: ஆம்பூரில் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் இன்று (ஜூன் 21) அதிகாலை உயிரிழந்தார்.

mugilan
mugilan

By

Published : Jul 21, 2020, 10:21 AM IST

Updated : Jul 21, 2020, 11:16 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத பொதுமுடக்கத்தின்போது ஆம்பூர் ஓ.ஏ.ஆர் தியேட்டர் அருகில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முகிலனின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால், விரக்தியடைந்த இளைஞர் முகிலன், காவல்துறையை கண்டித்து மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.

பின்னர், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. கடந்த எட்டு நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி முகிலன் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி பிரவீன் குமாரை விசாரணை அலுவலராக நியமனம் செய்து முதற்கட்டமாக அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் ஊர் காவல் படையைச் சேர்ந்த ஐந்து பேரை திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

பின்னர் இளைஞரிடம் வாகனத்தை பறிமுதல் செய்த காவலர் சந்திரசேகரை கடந்த 17ஆம் தேதி விசாரணை முடியும் வரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டார். டி.எஸ்.பி பிரவீன் குமார், கடந்த 8 நாட்களாக சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவான காட்சிகள் சேகரித்து சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல்துறையினர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த மூன்று பேர் என 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:இந்தியாவில் சமூக பரவலுக்கான எந்த ஆதாரமும் இல்லை - எய்ம்ஸ்

Last Updated : Jul 21, 2020, 11:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details