திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த சோலூர் கிராமத்தில் உள்ள நமாஸ்மேடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று(அக்.24) தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று பட்டாசுகள் மற்றும் இனிப்புகளை வழங்கி தீபாவளிப்பண்டிகையை கொண்டாடிய திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு, நரிக்குறவர் இன மக்கள் தீபாவளிப்பண்டிகைப் பரிசாக பாசிமாலை அணிவித்து காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.