திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே கெஜல்நாயக்கன்பட்டி அண்ணா நகர் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்றுவருகின்றனர்.
நாள்தோறும் பள்ளி விடும்பொழுது எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மாணவர்கள் கலாட்டா செய்துவந்துள்ளனர். இது குறித்து மாணவிகளின் பெற்றோர்கள் காவல் துறையிடம் பலமுறை முறையிட்டுள்ளனர்.
ஆனால் கந்திலி காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறையால் பாதுகாப்பு கொடுக்க முடியாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஊரடங்கால் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் கந்திலி காவல் துறையினர் கெஜல்நாயக்கன்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரே முகாமிட்டு சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் தங்கள் பிள்ளைகளுக்கு கரோனா பாதுகாப்பு கொடுத்திருக்கிறது என பெற்றோர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆன்லைன் வகுப்புக்கு டாட்டா: காவல் துறையின் அதிரடி அட்வைஸ்