தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கும் திட்டம்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு! - வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கும் திட்டம்

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் சிவனருள் தொடங்கி வைத்தார்.

வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கும் திட்டம்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைப்பு...!
வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கும் திட்டம்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைப்பு...!

By

Published : Aug 14, 2020, 6:55 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில், சுற்றுச்சூழலை பாதுகாத்து விவசாயத்தினை பேணிகாத்திட அரசன், புங்கன், கொய்யா, பூவரசமரம், வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை சேகரித்து, கிரிசமுத்திரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வீட்டுக்கு வீடு, சாலையோரம், பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் சிவனருள் தொடங்கி வைத்தார்.

வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கும் திட்டம்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு!

பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் சிவனருள், 'இம்மாவட்டத்தில் மரங்கள் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளன. வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையினைக் கருத்தில் கொண்டு மரம் நடுவதில் ஆர்வம் கொண்டுள்ள இப்பகுதி முன்னாள் மாணவர்களைப்போல, இளைஞர்கள் மரம் நடும் பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும். மாவட்டத்தினை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் நேரத்தில் சாலைகளில் வேகத்தடை போன்று, கரோனா நோய்த்தொற்று தடையாக இருப்பதால், அதனையும் தாண்டி நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்வர வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க...பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்; பராமரிப்பு இல்லாத அவலம்...!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details